டெல்லியின் விஜய்நகர் பகுதி சாலையில் நடந்துசென்ற வடகிழக்கு மாநில பெண்கள் இருவரிடம் 'சீன கரோனா வைரஸ்' எனக் கத்திவிட்டு இளைஞர்கள் புகையிலையை துப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய் நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 509இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, மத்திய உள் துறை அமைச்சகம் சார்பாக, ''கரோனா வைரசுடன் வடகிழக்கு மாநில மக்களை இணைத்து இனரீதியாகத் துன்புறுத்தினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Any racism towards people of #NorthEast is unacceptable... this person must be punished https://t.co/sdI1x6pU7g
— Sid Singh (@SiddFreeIran) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Any racism towards people of #NorthEast is unacceptable... this person must be punished https://t.co/sdI1x6pU7g
— Sid Singh (@SiddFreeIran) March 22, 2020Any racism towards people of #NorthEast is unacceptable... this person must be punished https://t.co/sdI1x6pU7g
— Sid Singh (@SiddFreeIran) March 22, 2020
தொடர்ந்து இந்தச் சம்பவம் பற்றி டெல்லியில் தங்கியிருக்கும் வடமாநில மக்களிடம் பேசுகையில், ''இனரீதியாக வடகிழக்கு மாநில மக்கள் மீது துன்புறுத்தல் நடப்பது புதிதானதல்ல. டெல்லி மெட்ரோ ரயில்களில் ஒவ்வொரு நாளும் நடப்பதுதான்.
முன்னதாக மோமோஸ், செளமின், நேபாளி உள்ளிட்ட பல பெயர்களால் எங்களை அழைத்துவந்தனர். இப்போதும் கரோனா வைரஸ் என அழைக்கிறார்கள். இதனை அறியாமை என்று கூற முடியாது'' என்றார் வேதனையுடன்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: உயிரிழப்பு 9ஆக உயர்வு