ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கில் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீட் சிங் பாதல், இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, நிதிச்சுமையைத் தீர்க்க மாநில அரசுகள் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர், மாநில நிதியமைச்சர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு, 3.1 லட்சம் கோடி ரூபாய் முதல் 3.6 லட்சம் கோடி வரை மாநிலங்களுக்கு இழப்பீடாகத் தேவைப்படுகிறது. ஜிஎஸ்டி வருவாயில் குறைந்தபட்சம் 14 விழுக்காடு வளர்ச்சி காணாத மாநிலங்களுக்கு 2022ஆம் ஆண்டு வரை இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது. இது குறித்த முடிவு ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை 3.00 மணிக்கு சந்திக்கவுள்ளார்.
இதையும் படிங்க: ஆழ்ந்த கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி - ராணுவ மருத்துவமனை தகவல்!