சோன்பத்ரா மாவட்டத்தின் சோன் பஹாடி, ஹார்டி ஆகிய இரு பகுதிகளில் 3,000 டன் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாவட்ட சுரங்க அலுவலர் கே.கே. ராய் நேற்று பரபரப்பான கூற்றை வெளியிட்டார். இதனையடுத்து, புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ.) இந்த மூவாயிரம் டன் தங்க வைப்புக் கூற்றை நிராகரித்து, அங்கே 160 கிலோ மதிப்பிடப்பட்ட தங்க இருப்பு மட்டுமே உள்ளதென அறிவித்தது.
இந்தச் சம்பவத்தை விமர்சிக்கும்விதமாகவே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் அரசு (பாஜக அரசு நாட்ட மக்களுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும்தான் என்பதைத்தான் நக்கலாக எங்கள் அரசு என்று குறிப்பிட்டுள்ளார்போலும்) ஏன் டன்-மன்-தன் மீது வெறித்தனமாக இருக்கிறது?
முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் ஐந்து மில்லியன் டன் பொருளாதாரத்தை அடையாளம் கண்டுள்ளோம் என்றது, இப்போது உ.பி.யிலிருந்து 3,350 டன் தங்கத்தின் இருப்பு 160 கிலோவாக மாறியுள்ளது. டன்-டனா-டன் பேச்சை அரசு சற்று குறைக்க வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜி.எஸ்.ஐ. இயக்குநர் எம். ஸ்ரீதர், "கனிமமயமாக்கப்பட்ட மண்டலம் என்பது ஒரு டன் தாதுவிலிருந்து சராசரியாக இயற்கையில் தரம்கொண்ட வளமான 3.03 கிராம் தங்கம் மட்டுமே எடுக்க முடியும். அப்படிப் பார்த்தால் 52,806.25 டன் தாதுவிலிருந்து எடுக்கக்கூடிய மொத்த தங்கத்தின் எடை சுமார் 160 கிலோ மட்டுமே எனலாம். மற்றபடி, ஊடகங்களில் சொல்லப்படும் 3,350 டன் அல்ல.
இது போன்ற தரவுகளை ஜி.எஸ்.ஐ.யைச் சேர்ந்த அலுவலர்கள் யாரும் வழங்கவில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் தங்க வைப்புத் தொகையின் பரந்த அளவிலான வளத்தை ஜி.எஸ்.ஐ. மதிப்பிடவில்லை.
மாநில அலகுகளுடன் கணக்கெடுப்பு நடத்திய பின்னர் தாதுக்களின் எந்தவொரு வளத்தைப் பற்றிய எங்கள் முடிவுகளை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். ஜி.எஸ்.ஐ. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த நாங்கள் 1998-1999, 1999-2000 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பிராந்தியத்தில் பணிகளை மேற்கொண்டோம். தகவல் மற்றும் மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த அறிக்கை யுபி டிஜிஎம் உடன் பகிரப்பட்டதும் இருக்கிறது” என்றார்.
இதன்மூலமாக சோன் பஹாடியில் 2,943.26 டன் தங்கம் இருக்கிறது என்றும், ஹார்டியில் 646.16 கிலோ கிராம் தங்கம் இருக்கிறது என்றும் கூறப்பட்டவை வதந்தி என உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : 'ஜிஎஸ்பி-யை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வீர்களா?' - பிரதமருக்கு காங். கேள்வி