நாட்டில் கோவிட் - 19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டத்தினை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜயராகவன் இந்தத் திட்டத்தை அனைத்தும் துறைகளிலும் மேம்படுத்த ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும் அவருடன் இணைந்து , மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையும் ஆலோசனையை வழங்குகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் நான்கு கட்டமாக நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
முதல்கட்டம்: அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டத்தை மேம்படுத்த பொதுமக்கள், துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகள் கேட்டப்படும்.
இரண்டாம் கட்டம்: துறை சார்ந்த வல்லுனர்கள் வழங்கிய தரவுகளின் ஆதாரத்தை வைத்து கோப்பு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டம்: துறை சார்ந்த மத்திய - மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை.
நான்காம் கட்டம்: தொழில் நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர்களுடன் ஆலோசனை.
இதன் முதல்கட்ட ஆலோசனை வரும் ஜுன் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல் பிரதமருக்கு நரேந்திர மோடி வாழ்த்து!