மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி அரசு கமிட்டி கூட்டம் நேற்று (நவ.02) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிலை வைக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் கலைஞர் மு.கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இடத்தை முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் சிலை வைப்பதற்கான இடத்தை அளவீடு செய்தனர்.