ETV Bharat / bharat

பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா திட்டத்தின் மாற்றங்கள் - விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா! - Pradhan Mantri Fasal Bima Yojana

மாநிலங்கள் ஒரு பெரிய நிதிச் சுமையினைப் பகிர்ந்துகொள்ள ஒத்துக்கொள்ளாவிட்டால், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நீடித்த பிரச்னைகளை எழுப்பக்கூடும்.

ே்ே
்ே்
author img

By

Published : Mar 21, 2020, 3:12 PM IST

விவசாயிகளின் தேர்வுக்கென்று, பண்ணைக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைக்கும் நோக்குடன், மத்திய அரசு, பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிப்ரவரி 2016இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் விவசாயக் கடனாளிகள், காப்பீடு எடுக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது, மொத்தம் 58 சதவிகித கடனாளிகள் உள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது தான் அதிகமாக விவாதித்துக் கொண்டிருந்த பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தினை காரீப் 2016ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து அது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் (பிப்ரவரி 19, 2020), மத்திய அமைச்சரவை PMFBY இல் பெருமளவு மாற்றங்களை அறிவித்ததன் மூலம் மேலும் ஒரு பயிற்சியினை மேற்கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு பிரதான மாற்றங்கள் இருக்கின்றன. முதலாவது என்னவென்றால், கடனாளி அல்லாத விவசாயிகளுக்கும் இத்திட்டத்தினைக் கட்டாயமாக்கும் முடிவாகும். இரண்டாவது, மானாவாரி பயிர்களுக்கும், நீர்ப்பாசனம் இல்லாத பகுதிகளுக்கும் காப்பீட்டு மானிய வரம்பினை 30 சதவிகிதமாகவும், நீர்ப்பாசனமுள்ள பயிர்களுக்கும், பகுதிகளுக்கும் 25 சதவிகிதமாகவும் ஆக்குவதும் ஆகும். இந்த இரண்டு முடிவுகளும் இத் திட்டத்தில் பெரிய தாக்கத்தினை உண்டாக்கக்கூடியதாக இருப்பதால் இனி வரும் பருவங்களில் இதனைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

முன்னிலை காப்பீட்டு நிறுவனங்களின் நிபுணர்களின் கருத்துபடி, கடனாளிகளல்லாத விவசாயிகளுக்கு PMFBY திட்டத்தினைக் கட்டாயமாக்குவதென்பது, இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையின் குறைவுக்கு வழிவகுக்கும். ஏனெனில் தங்களுக்கு நேரிடும் அபாயங்கள் கணிசமாக உயரக்கூடும் என்று கணிப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேருவார்கள்.

இந்த வெளியீடு-ஏற்பாடானது, குறுகிய காலத்தில், இத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு குறைவுக்கு வழி செய்யும். மேலும், மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகத்திலுள்ள உயர் அதிகாரிகள் குறுகிய காலத்தில் PMFBY திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 முதல் 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளதை காண்கின்றனர்.

2016இல் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிர் காப்பீடுத் திட்டமானது மிகுந்த கவனத்துடனும், ஊக்கத்துடனும் செயல்படுத்தப்பட்டதினால் அந்த ஆண்டிலிருந்து அக்காப்பீட்டின் கீழுள்ள பகுதியானது 22 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

அதோடுமட்டுமன்றி, காரீப் 2020 லிருந்து இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. காரிப் 2016 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலங்களில் இந்தத் திட்டத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 14 சதவிகிதம் சரிந்து 40.4 மில்லியனிலிருந்து 34.80 மில்லியனாக ஏற்கனவே குறைந்துவிட்டதை செய்திக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

பதிவு செய்தலில் இருக்கும் இந்த சரிவானது, பெரும்பாலும், பல்வேறு மாநில அரசுகள் அறிவித்த பெரும்பாண்மையான கடன் தள்ளுபடிகள், கட்டாய ஆதார் இணைப்பு நிபந்தனைகள் மற்றும் போலியாக உரிமை கோருபவர்களைக் களைதல் போன்ற காரணங்களால் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறைந்த அளவிலான விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் சேருவதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில், ரபி பருவத்தில் PMFBYஇன் கீழ், இயல்பான காப்பீட்டுத் தொகையானது 12 சதவிகிதமாகவும், காரீப் பருவ பயிர்களுக்கான தொகையானது 14 சதவிகிதமாகவும் நிலையாக உயர்ந்துள்ளது.

இப்பொழுதும், சொற்ப விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் சேர நேர்ந்தாலும், இயல்பான காப்பீட்டுத் தொகை மேலும் உயரும். இந்தக் கட்டத்தில்தான் மானியத்தில் மத்திய அரசின் வரம்பு அளவு ஒரு தீர்வான பங்கினை ஆற்றக்கூடியதாக இருக்கிறது. இதன் கீழ் நீர்ப்பாசனம் அற்ற பகுதிகளுக்கும், பயிர்களுக்குமான இயல்பான காப்பீட்டுத் தொகையானது 30 சதவிகிதத்திற்கு மேலும், நீர்ப்பாசன பகுதிகள் மற்றும் பயிர்களுக்குமான தொகையானது 25 சதவிகிதம் என்ற நிலையிலும் இருக்கிறது. மத்திய அரசின் மானியச் சுமையின் பங்கானது அந்த அளவிற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, நீர்ப்பாசனம் செய்யப்படாத பகுதியில், ஒரு பயிரின் இயல்பான காப்பீட்டுத் தொகை 40 சதவீதமாக வரும் என்று வைத்துக் கொள்வோம். இதில், விவசாயின் பங்கு 2 சதவிகிதம் என்று வரையறுக்கப்பட்டால், மீதமுள்ள 38 சதவிகித காப்பீட்டுத் தொகையானது ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் மத்திய, மாநிலங்களுக்கிடையே சமமாக பகிரப்படும். வருகின்ற காரீப் பருத்திலிருந்து (2020), விவசாயினுடைய காப்பீட்டுத் தொகையின் பங்கு 2 சதவிகிதத்திலேயே இருக்கும். ஆனால் மத்திய அரசு, அதன் பங்கிற்கென்று 30 சதவிகிதம் வரை மானியம் மட்டுமே செலுத்தும். அதன் அர்த்தம் என்னவென்றால், அந்தத் தொகையானது ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் 14 சதவிகிதம் மட்டுமே ஆகும். இந்த வகையில், மாநில அரசானது இத்திட்டத்தின் கீழ் பங்குபெற விரும்பினால் மீதமுள்ள 24 சதவிகிதத்தினை மாநில அரசுதான் ஏற்றுக்கொண்டு கட்டவேண்டும் எனப் பொருள்படும்.

எந்த மாநிலமாவது இந்தக் கூடுதல் சுமையினைப் பங்கிட்டுக் கொள்ள விரும்பாவிட்டால், விவசாயிகள் ஒரு நம்பகமான காப்பீட்டு தயாரிப்பின் வரம்புக்கு வெளியே தங்களை நிலைப்படுத்திக் கொள்ளலாம். அந்த நிலையில் அவர்களுக்குப் பயிர் இழப்பு ஏற்பட்டால், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழுள்ள (SDRF) வழக்கமான பயிர் சேத இழப்பீட்டினை மட்டுமே நம்பயிருக்க வேண்டும். இது திட்டத்தின் நலனுக்கு மிகவும் மோசமான பாதிப்பினை உண்டாக்கும். (மத்திய அரசு கொண்டு வந்துள்ள சமீபத்திய மாற்றங்களினால் எழும்பும் தேவைகளைச் சந்திக்க ஆந்திரப் பிரதேசம் போன்று பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாயிருக்கும் மாநிலங்கள் உண்மையிலேயே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியுமா என்று சில மூத்த அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்).

பயிருக்கு இழப்பு நேரிட்டால், SDRF இன் கீழ் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையானது தீர்வுக்கான அடிப்படையாய் விளங்கும் PMFBY திட்டத்தின் கீழ் கிடைக்கும் நிதியளைவைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

விவசாயம், தோட்டக்கலை மற்றும் வருடாந்திரத் தோட்டப் பயிர்களைப் பொறுத்த வரையில், நீர்ப்பாசனமற்ற பகுதிகளில் (விதைக்கப்பட்ட பகுதிக்குள்) ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,800 ம், நீர்ப்பாசனமுள்ளப் பகுதிகளில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 13,500 ம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2 ஹெக்டேர்களுக்கு மேல் சொந்த நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகையானது 2 ஹெக்டேர் நிலப்பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் காரிப் 2018 இல் நிதி அளவாக (எடுத்துக்காட்டாக), ஆமணக்கு சாகுபடிக்காக ஹெக்டேருக்கு ரூ. 39,000, பாசன பருத்திக்கு ஹெக்டேருக்கு ரூ. 58,000 மற்றும் நிலக்கடலை ஹெக்டேருக்கு ரூ. 42,000 என்றும் இருந்தது. எனவே, பயிர்க் காப்பீடு இல்லாத பட்சத்தில், தற்போதைய SDRF இன் விதிமுறையின் கீழ் விவசாயிகள் மிகவும் குறைந்த அளவிலான இழப்பீட்டினையே பெறுவார்கள்.

மாநிலங்கள் இதிலிருந்து வெளிவந்து தங்களுடைய மானியத் தொகையின் பங்கினைக் குறைவான அளவில் வைத்துக்கொண்டு அதே நேரம் விவசாயிகளும் ஒரு நல்ல காப்பீட்டு தயாரிப்பினைப் பெற்றுக் கொள்ளவும் வழி செய்ய வேண்டுமானால், PMFBY இன் கீழ் அடங்கியுள்ள பனிமழைப் பொழிவினால் ஏற்படும் இழப்பீட்டினை அளிக்கும் விளைபொருட்களைப் போல குறிப்பாக ஒற்றைச்சார்-அழிவு விளைபொருள்களை அடிப்படைப் பிணைப்புடனோ அல்லது அடிப்படைப் பிணைப்பு இல்லாமலோ தெரிந்தெடுத்துக் கொள்ளவேண்டும். சமீபத்திய அமைச்சரவை முடிவு இதனை அனுமதித்துள்ளது. அப்படிப்பட்ட விளைபொருள்கள், இயல்பான நடைமுறையில், ஒரு குறைந்த காப்பீட்டுக் கட்டணத் தொகைக்குள்ளேயே தனிப்பயணாக்கப்பட்ட அபாயத்தினைக் கூட உள்ளடக்கிவிடும். PMFBY க்கு இது புத்துயிர் ஊட்டுமா என்பதை வரும் ஆண்டுகளில் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதையும் படிங்க:மக்கள் ஊரடங்கு: மார்ச் 22ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.