ETV Bharat / bharat

“உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மாநில அரசுகள் அக்கறையோடு செயல்படவில்லை ” - பாஸ்வான் - பொது விநியோக முறை

டெல்லி: பொது விநியோக முறையின் கீழ் பயனாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மாநில அரசுகள் அக்கறையோடு செயல்படவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

States not doing enough for free distribution of pulses under PDS: Paswan
“உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மாநில அரசுகள் அக்கறையோடு செயல்படவில்லை ” - பாஸ்வான்
author img

By

Published : May 9, 2020, 2:58 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், ”கோவிட் -19 பரவலைத் தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில் பிரதான் மந்திரி கரிப் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.ஏ) திட்டத்தின் கீழ் பொது விநியோக முறை பயனாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை விலையில்லாமல் விநியோகிப்பதில் மாநில அரசுகள் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள் முன்னதாகவே அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவை பொது விநியோக முறையின் (பி.டி.எஸ்) கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளர்களுக்கு 53 ஆயிரத்து 617 டன் எடை மட்டுமே அவர்களால் விநியோகிக்க முடிந்துள்ளது. பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இந்த செயல்முறையை விரைவுப்படுத்துமாறு அவர்களை வலியுறுத்துகிறேன்.

ரேஷன் உணவுப் பொருள்களை விநியோகிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. இந்தக் கடினமான காலத்திலும் உணவுப்பொருள்களை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வது எங்களுக்கு எளிதானது அல்ல இருந்தும் அதனை நாங்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். குறைந்தபட்சம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தானியங்களை ரேஷன் வழியாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

States not doing enough for free distribution of pulses under PDS: Paswan
“உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மாநில அரசுகள் அக்கறையோடு செயல்படவில்லை ” - பாஸ்வான்

மாதந்தோறும் 1.95 லட்சம் டன் தானியங்கள் மத்திய அரசால் இந்தியா முழுவதுமாக கையளிக்கப்பட்டுவந்த நிலையில் இந்த மாதம் 1.81 லட்சம் டன் உணவுத் தானியங்கள் இதுவரை பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வெறும் 53 ஆயிரத்து 617 டன் மட்டுமே பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன”என தெரிவித்தார்.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் விஷ வாயு விபத்து: ஆலை உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.