ETV Bharat / bharat

வெற்றி வாகை சூடிய நட்சத்திர வேட்பாளர்கள்! - பாஜக

17ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நட்சத்திர வேட்பாளர்களை பற்றிய சிறு தொகுப்பை காணலாம்.

நட்சத்திர வேட்பாளர்கள்
author img

By

Published : May 23, 2019, 11:30 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில், வெற்றி பெற்ற நட்சத்திர வேட்பாளர்களை பற்றிய சிறு தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

அருணாச்சலப்பிரதேசம்

- கிரண் ரிஜிஜு

அருணாச்சல மாநில மேற்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கடந்த மூன்று முறை வெற்றிப் பெற்ற மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

பீகார்-

ரவி சங்கர் பிரசாத்

பீகார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். அம்மாநில மாநிலங்களவை உறுப்பினரான ரவி சங்கர், கடந்த இருமுறை இந்த தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற சத்ருகன் சின்ஹாவை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 114 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

டெல்லி-

கவுதம் கம்பீர்

கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

குஜராத்

-அமித் ஷா

பாஜகவின் கோட்டையான குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியை அக்கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷா கைப்பற்றியுள்ளார். இத்தொகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பாஜக மூத்தத் தலைவர் அத்வானி தன் வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா
அமித் ஷா

ஜம்மு காஷ்மீர் -

ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்தித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இரண்டாவது முறையாக அத்தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

கர்நாடகா -

சுமலதா

கர்நாடகா மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் வேட்பாளர் நிகில் குமாரசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் காங்கிரஸ் எம்பி அம்பரீஷின் மனைவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமலதா
சுமலதா

கேரளா-

ராகுல் காந்தி

கேரளா மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அமேதியிலும், கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், ராகுல் காந்தியின் வட இந்திய கோட்டை இடிந்து விழுந்த நிலையில், வயநாடு தொகுதி அவருக்கு மக்களவைக்கு செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கேரளா-சசிதரூர்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திவாகரனை வீழ்த்தி, காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசிதரூர் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக அவர் மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

சசிதரூர்
சசிதரூர்

மத்தியப்பிரதேசம் -

பிரக்யா சிங் தாகூர்

பல சர்ச்சைகளுக்கு உள்ளாகிய பிரக்யா சிங் தாகூர், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய சிங்கை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார்.

பிரக்யா சிங் தாகூர்
பிரக்யா சிங் தாகூர்

மகாராஷ்டிரா

-நிதின் கட்காரி

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான நிதின் கட்காரி வெற்றி பெற்றுள்ளார். தனக்கு போட்டியாக இருந்த காங்கிரஸின் நானா படோலை சுமார் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நாக்பூரை இவர் கைப்பற்றினார்.

நிதின் கட்காரி

Intro:Body:

dummy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.