சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்று பொய்யான கருத்தை முன்வைக்கும் பாஜகவை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் திமுகவின் சார்பில் கண்டன போராட்டம் நடத்த இருப்பதாக திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கூட்டமானது, ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறுவதாகவும், அந்த கூட்டத்தில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.