இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று மத்திய பா.ஜ.க அரசு இவ்வளவு காலம் தாழ்த்தி உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுகள் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கும் விதமான பா.ஜ.க. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வளவு காலம் எடப்பாடி பழனிச்சாமி வாய்மூடி இருந்ததின் உள்நோக்கம் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்பது ஏற்கனவே முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது என்பது இப்போது வெளி வந்திருக்கிறது. தமிழகச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை மத்திய பாஜக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தமிழகச் சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.