பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ரியா சக்கரவர்த்தியிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணை செய்துவரும் வேளையில், அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பது செல்போன் உரையாடல் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து, ரியா சக்கரவர்த்தியை என்சிபி அலுவலர்கள் விசாரிக்க தொடங்கினர். மூன்று நாள்கள நடைபெற்ற விசாரணைக்கு பிறகு ரியா சக்ரவர்த்தி என்சிபி அலுவலர்களால் கைது செய்யப்பட்டார் முன்னதாக,போதைப் பொருள் விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டில் ரியாவின் சகோதரர் ஷோவிக்கும், சுஷாந்த்தின் மேலாளர் சாமுவல் மிராண்டாவும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.பி. குராவ் அமர்வில் இன்று (செப்.11) விசாரணைக்கு வந்தது. அதில், குற்றவாளிகளிக்கு பிணை வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என என்சிபி அலுவலர்கள் தரப்பில் கூறியதையடுத்து, ரியா உள்பட நான்கு பேருக்கும் பிணை மறுக்கப்பட்டது.