கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., உயர்நிலை, தொழிற்கல்வி உயர்நிலைத் தேர்வுகள் ஆகியவை மே 26ஆம் தேதிமுதல் மே 31ஆம் தேதிவரை நடத்தப்படும் என்று கேரள அரசு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி இன்று தேர்வுகள் தொடங்கின.
இந்தத் தேர்வை, சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்கீழ் தேர்வுகள் பாதுகாப்பான முறையில் நடைபெறுகின்றன.
தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேர்வு நடைபெறும் பள்ளிகள் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன.
இது குறித்து கேரள கல்வி அமைச்சர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கூறியதாவது, “பள்ளிகளை இயல்புநிலைக்கு கொண்டுவர கல்வித் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் அனைத்துப் பள்ளிகளும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன.
மத்திய சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளைத் தூய்மைப்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக சந்தேகமா, இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க'