ETV Bharat / bharat

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை! - Sri lanka President Gotabaya Rajapaksa

டெல்லி: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச மூன்றுநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

SRILANKA PRESIDENT GOTABAYA RAJAPAKSA
SRILANKA PRESIDENT GOTABAYA RAJAPAKSA
author img

By

Published : Nov 28, 2019, 11:10 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தரையிறங்கிய அவரை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். அதிபர் கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை செயலர் ரவிநாதா ஆர்யசின்ஹா, கருவூல செயலர் என்.ஆர். அட்டிகாலே உள்ளிட்ட உயர்மட்ட அலுவலர்கள் குழுவும் வந்துள்ளது.

இதையடுத்து, நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை கோத்தபய சந்தித்து பேசவுள்ளார். இதுதவிர, ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தவுள்ளார்.

"முதல்முறையாக இந்தியாவுக்கு அரசு முறையாக பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அந்நாட்டுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் இருதரப்பு உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கோத்தபய பதிவிட்டிருந்தார்.

கடந்த 16ஆம் தேதி அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.

இதன்விளைவாக, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தன் மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவை, கோத்தபய பிரதமராக்கினார்.

Intro:Body:

Rajapakse India Visit

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.