ETV Bharat / bharat

இந்தியாவின் அக்கறையால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் - சேனாதிபதி ராஜா எம்.பி. - சேனாதிபதி ராஜா

புதுச்சேரி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலைகள் தென்படுவதாக இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிபதி ராஜா கூறியுள்ளார்.

mp
mp
author img

By

Published : Feb 6, 2020, 7:28 PM IST

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து பதினான்காவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு இன்று புதுச்சேரி பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கனடா, இலங்கை உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்ததுடன், மாநாட்டு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிபதி ராஜா, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சேனாதிபதி ராஜா, “இலங்கையில் இன விடுதலைக்காக லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்தும், விடுதலை கிடைக்காத நிலையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழர்கள் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலைகள் தென்படுகிறது.

சர்வதேச ரீதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், குறிப்பாக இந்திய நாட்டின் அக்கறையும், இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை கொடுப்பதற்குரிய ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் அக்கறையால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்

போர் காலத்திலும், அதற்கு முன்னரும், ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் இன்னும் தமிழர்களிடம் விடுவிக்கப்படாமல் இருக்கிறது. மக்கள் மீள்குடியேற்றப்பட அனுமதிக்கப்படாமல் இருக்கின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அதையொட்டி புதிய கிளர்ச்சி உண்டாகியிருக்கிறது. தமிழர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்“ என்று சேனாதிபதி ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாலியல் வழக்குகள் பெருகுது! மார்க்சிஸ்ட் கம்யூ., குற்றச்சாட்டு

Intro:இந்திய நாட்டின் அக்கறையும் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை கொடுப்பதற்குரிய ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் இலங்கை எம் பி சேனாதிபதி ராஜா புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளருக்கு இதனை தெரிவித்தார்

Body: புதுச்சேரி பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து பதினான்காவது உலக தமிழ் பண்பாட்டு மாநாடு இன்று புதுச்சேரி பல்கலைகழக அரங்கத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கனடா இலங்கை உள்ளிட்ட ஒன்பது வெளிநாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் ஏழாம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார் விழாவில் மாநாட்டு மலரை வெளியிட்டார் நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிபதி ராஜா, சபாநாயகர் சிவக்கொழுந்து, வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிபதி ராஜா

இலங்கையில் இன விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்தும் அவர்களுக்கு சுதந்திரமோ விடுதலையோ கிடைக்காத நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தல் ,அதற்கு பிறகு இலங்கை தமிழர்கள் மீண்டும் ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலைகள் இப்பொழுதும் தென்படுகிறது என்றார்

சர்வதேச ரீதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாக இந்திய நாட்டின் அக்கறையும் இந்த இலங்கை தமிழர்களுக்கு விடுதலை கொடுப்பதற்குரிய ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்

போர் காலத்திற்கு முன்னரும் போர் காலத்திலும் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு விடுவிக்கப்படாமல் இருக்கிறது மக்கள் மீள்குடியேற்றப்பட்ட அனுமதிக்கப்படாமல் இருக்கின்றது தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கிறார் அதையொட்டி புதிய கிளர்ச்சி உண்டாகியிருக்கிறது தமிழர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்தி உள்ளது என்றும் சேனாதிபதி ராஜா தெரிவித்தார்

Conclusion:இந்திய நாட்டின் அக்கறையும் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை கொடுப்பதற்குரிய ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் இலங்கை எம் பி சேனாதிபதி ராஜா புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளருக்கு இதனை தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.