ETV Bharat / bharat

'இந்திய - சீன மோதலை தணிக்க ஸ்புட்னிக் வி ஒரு சிறந்த வாய்ப்பு'

author img

By

Published : Dec 1, 2020, 10:35 AM IST

ஹைதராபாத்: இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து ஒரு சிறந்த உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருக்கும் என்று இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இணை பேராசிரியர் ஜி வெங்கட் ராமன் கூறியுள்ளார்.

Sputnik V
Sputnik V

கரோனாவுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலக ஆராய்சியாளர்கள் முயன்று கொண்டிருந்தபோது, ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை அறிவித்தது. இருப்பினும், அப்போது மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனைகள் நடத்தப்படாததால் பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின.

அதன் பின்னர் வெளியான முதல்கட்ட மருத்துவச் சோதனை முடிவுகள் ஸ்புட்னிக் வி மீது சற்று நம்பகத்தன்மையை அதிகரித்தது. அதன்படி பிரிக்ஸ் நாடுகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை இழந்துவருவதால், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து உறுப்பு நாடுகளின் ஒற்றுமைக்கு ஒரு பொதுவான நோக்கத்தை வழங்குவதாக இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இணை பேராசிரியர் ஜி வெங்கட் ராமன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல்கள் பிரிக்ஸ் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இந்தச் சூழலில் கரோனா தடுப்பு மருந்து பிரிக்ஸுக்குத் தேவையான உந்துசக்தியை வழங்கும்” என்றார்.

முன்னதாக, கரோனா காரணமாகவும் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருந்த பிரிக்ஸ் மாநாடு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த மாநாடு, வரும் காலங்களில் பிரிக்ஸ் நாடுகள் கரோனா தடுப்பு மருந்திற்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைத் தெளிவாகக் காட்டியது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், "ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவது தொடர்பாக பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் தடுப்பு மருந்தின் உற்பத்தியைத் தொடங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன்மூலம் நம் நாடுகளின் தடுப்பு மருந்து தேவையை மட்டும் நாம் பூர்த்தி செய்யக் கூடாது, மூன்றாம் நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும்" என்றார்.

ஹைதராபாத்திலுள்ள ஹெட்டெரோ பயோபார்மா நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 10 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து டோஸ்களை உற்பத்தி செய்யவும் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வெங்கட் ராமன் இது குறித்து மேலும் கூறுகையில், "சுகாதாரத் துறையில் கூட்டாண்மை என்பது பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைகிறது. ஏனெனில், இதில் அனைத்து நாடுகளுக்கும் லாபமே. தற்போது கரோனா தடுப்பு மருந்தில் ​​இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் உள்ளன. கரோனாவைக் கட்டுப்படுத்த இதுபோன்ற இன்னும் பல முயற்சிகள் தேவைப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ’கோவின் செயலி’யில் சுகாதாரப் பணியாளர்களின் தரவைப் பதிவேற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.