ETV Bharat / bharat

பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி! - பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி

ஹைதராபாத்: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

Plastic free
Plastic free
author img

By

Published : Jan 20, 2020, 1:47 PM IST

இயற்கை எழில் கொஞ்சும் சமூகத்தை உருவாக்குவதே அண்ணல் காந்தியடிகளின் கனவாக இருந்தது. இந்த கனவுக்கு தடையாக இருப்பது பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக்களுக்கு எதிரான போராட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகரான திருப்பதி நகராட்சி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. உள்ளூர் வாசிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரை தவிர்த்து, திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி எறியப்பட்டதால் நகரம் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டது.

திருப்பதியில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய நகராட்சி நிர்வகம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் முடிவு செய்தது. அதன்படி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவை சார்பில் பேரணி, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு 'பிளாஸ்டிக் பஹிஷ்காரனா ஜெயபெரி' என்று பெயரிடப்பட்டது. இது சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தானாக முன்வந்த மக்கள் பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சியிடம் மறுசுழற்சிக்காக ஒப்படைத்தது.

பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டவுடன், அதற்கு மாற்றுத் தேவைப்பட்டது. காகிதம், துணி, நார்களால் செய்யப்பட்ட பைகள் ஆகியவற்றை பெண்களுக்கான சுய உதவி குழுக்கள் தயாரித்தனர். இது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சுய உதவி குழுக்கள் இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பைகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான பிரசாதம் கவுன்டர்களில் விற்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக திருப்பதி நகரம் மேற்கொண்ட முயற்சிக்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த முயற்சியால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பில் சின்னசாமி மைதானம்!

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.