ETV Bharat / bharat

கரோனா ஊரடங்கின்போது அதிகரித்துள்ள சட்டவிரோத சிகரெட் கடத்தல் - சிகரெட் கடத்தல்

டெல்லி: கரோனா ஊரடங்கின்போது சட்டவிரோத சிகரெட் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொருளதாரத்தை அழிக்கும் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான குழு தெரிவித்துள்ளது.

cigarette smuggling COVID-19 lockdown FICCI CASCADE Committee Against Smuggling and Counterfeiting Activities Destroying the Economy imported cigarettes cigarette smuggling coronavirus சட்டவிரோத சிகரெட் கடத்தல் பிக்கி சிகரெட் கடத்தல் ஊரடங்கின்போது அதிகரித்த சிகரெட்கடத்தல்
ஊரடங்கின்போது அதிகரித்த சிகரெட்கடத்தல்
author img

By

Published : Jun 15, 2020, 3:01 PM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கையடுத்து வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சிகரெட் கடத்தலிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

ஊரடங்கின்போது வெளிநாட்டு சிகரெட்டுகள் வழக்கத்திற்கு அதிகமாக கைப்பற்றப்பட்டன. குறிப்பாக கம்போடியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 11.8 கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள் மும்பையில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது.

கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள அளவினை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் ஊரடங்கின்போது சட்டவிரோத சிகரெட் கடத்தல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாக பிக்கி என்றழைக்கப்படும் பொருளதாரத்தை அழிக்கும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்குழு வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் சட்டவிரோத சிகரெட் கடத்தல் நடந்துவருவதாகவும், அவ்வாறு கடத்தப்படும் சிகரெட்டின் முக்கிய விற்பனைத் தளமாக இந்தியா இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத சிகரெட் கடத்தல் தற்போது மிகுந்த லாபகரமாக மாறியுள்ள நிலையில், சிகரெட் உற்பத்தித் துறையில் 3.4 லட்சம் வேலையிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் கஞ்சா பதுக்கல்: தந்தை, மகன்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.