ETV Bharat / bharat

சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானிக்கு கரோனா தொற்று

author img

By

Published : Mar 29, 2020, 3:48 PM IST

டெல்லி: வெளிநாடுகளுக்கு செல்லாத ஸ்பைஸ்ஜெட் விமானி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SpiceJet Pilot Tests Positive For COVID-19

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானி ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர் கடந்த 21ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கியதாகவும், இவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைபடுத்தியுள்ளதாகவும், இவருடன் தொடர்பிலிருந்த அனைத்து ஊழியர்களும் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட விமானிக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினிகள் அளிக்கப்பட்டதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா: சென்னையில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.