காணொலி இணைப்பின் வழியே கோவாவில் சிக்கித் தவிக்கும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுடன் உரையாடிய முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், ’'இந்த காணொலி சந்திப்பில், கோவாவின் கடலோரப் பகுதியிலிருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உனாவுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் வேண்டுகோள்விடுத்ததை எடுத்துக்கூறினார்.
மேலும், முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூரின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இமாச்சலப் பிரதேசத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அளித்த உத்தரவாதத்தை மக்களுக்கு அறியப்படுத்தினார்.
மே 13 அல்லது 14ஆம் தேதிகளில் கோவாவிலிருந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் கூறியதை மக்களுக்கு தெளிவுபடுத்திய இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் ஆறுதல் கூறினார்''எனத் தெரிவித்துள்ளது.
![Special train will bring back 1,204 stranded Himachalis from Goa next week: CM](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7137301_ap.jpg)
கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 1,204 பேர் கோவாவில் சிக்கியுள்ளனர். சிக்கியுள்ளவர்களில் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 398 பேர் , குல்லு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 246 பேர், காங்கிராவைச் சேர்ந்தர்கள் 241 பேர், சம்பாவைச் சேர்ந்தவர்கள் 105 பேர், சிம்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 70 பேர், சோலன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 43 பேர் என இமாச்சலப் பிரதேச அரசு தகவல் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 302 ரயில்களில் 2 மட்டுமே இயக்கம்: வஞ்சிக்கப்படும் வங்காளத் தொழிலாளர்கள்?