இந்தியாவுக்கு வெளியே பணம் அனுப்புவது தொடர்பாக தனிநபர்கள் அல்லது இந்து பிரிவினை ஆகாத குடும்பங்கள் (HUF) மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளைப் பாதிக்கும் சில திருத்தங்களை பட்ஜெட் முன்மொழிந்துள்ளது.
தங்களின் குழந்தைகளுக்கான கல்வி, தங்குமிட கட்டணங்களுக்காகப் பணம் அனுப்பத் திட்டமிடும்போது, சட்டத்தின்கீழ் வரித் தளத்தை விரிவுபடுத்தும் மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரி என்னும் டி.சி.எஸ். (TCS- Tax Collected at Source) உடன் இணங்க வேண்டியது அவசியம் என்பதால் பட்ஜெட், மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு ஒரு வேதனையான விஷயத்தை முன்வைத்துள்ளது.
நிச்சயமாக இதைப் பின்பற்றுவது பெரும்பாலான பெற்றோர்களுக்குச் சிக்கலானது. மேலும் ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு அமெரிக்க டாலர்கள் அல்லது யூரோ நாணயங்களின் ரூபாய்க்கு ஈடான மதிப்பு மிக அதிகமாக இருக்கும்போது பணத்தை அனுப்ப அவர்கள் ஒவ்வொரு முறையும் நிதிக்களங்களைத் தேடுவதால் அவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுகளையும் பணப்புழக்கத்தின் மீதான தாக்கத்தையும் கூடுதலாக ஆராய்வோம்.
சட்டத்தில் 206சி பிரிவின் திருத்தத்தின்படி, நாணய விற்பனையாளர் (அங்கீகரிக்கப்பட்ட வியாபாரி) இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்பட வேண்டிய எஃப்.சி.யின் மதிப்புக்கு (ஒரு நிதியாண்டில் மொத்தத் தொகை ஏழு லட்சம் ரூபாயைத் தாண்டவில்லையெனில்) கூடுதலாக 5 விழுக்காடு வசூலிப்பார்.
வேறு சொற்களில் கூறுவதனால், தொகையை வாங்குபவர் எல்.ஆர்.எஸ்.இன் (தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டம்) கீழ் கல்வி அல்லது ரிசர்வ் வங்கியின் எல்.ஆர்.எஸ். கொள்கையின்கீழ் அனுமதிக்கப்பட்ட வேறு எந்த நோக்கங்களுக்காக வெளியில் அனுப்பப்படும் நாணயத்தின் மதிப்பில் 5 விழுக்காடு கூடுதல் தொகையை செலுத்த வேண்டும்.
இந்த எல்.ஆர்.எஸ்.இன் கீழ் ஒரு நபர் ஒரு நிதியாண்டில் பயணம், மருத்துவச் சிகிச்சை, கல்வி, பரிசுகள், நன்கொடைகள் வகையில் நெருங்கிய உறவினர்களின் பராமரிப்புச் செலவினங்களைச் சந்திப்பதற்காக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை அனுப்ப அனுமதிக்கப்படுகிறார். மேலே கூறப்பட்ட தொகையைப் பெறுபவர்கள் வெளிநாடுகளில் உள்ள பங்குகள், கடன் பத்திரங்கள், அசையா சொத்துகளில் முதலீடு செய்யலாம்.
இந்த டி.சி.எஸ்.இன் விளைவாக ரூ.7 லட்சத்துக்கு மேல் அனுப்பும் பணத்திற்கு 5 விழுக்காடு (டாலர் ஒன்றுக்கு ரூ.71.50 என கணக்கிடப்பட்டால் இது ஏறக்குறைய 9,790 டாலருக்குச் சமமாகும்). எல்.ஆர்.எஸ். பெரும் தொகையை அனுமதித்தாலும், அறிமுகப்படுத்தப்பட்ட டி.சி.எஸ். இதுபோன்று உபரியாகப் பணம் அனுப்புவதை நிச்சயமாகச் சரிபார்க்கும், ஏனெனில் ஒவ்வொரு பணமும் ஒரு நிதியாண்டில் மொத்தமாக ரூ.7 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும் ஒவ்வொரு தொகைக்கும் இந்த டி.சி.எஸ். 5 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது.
ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைச் சொந்த பணம் அல்லது வங்கியிலிருந்து கடன் வாங்கிய தொகை மூலம் அனுப்ப வேண்டும் என்று கருதினால், அந்த நபர் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின் கீழ் ஐந்தாயிரம் அமெரிக்க டாலர் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும்.
இது நிச்சயமாக வலிதரக்கூடிய அளவு. எவ்வாறாயினும், வருமான வரிச்சட்ட விதிகளின்கீழ் அந்த நபர் தனது மொத்த வருமானத்தை அறிவிக்கும்போது மேலே கூறப்பட்டபடி டி.சி.எஸ்.இன் கீழ் செலுத்தப்பட்ட கடன் தொகை உபரி அனுமதிக்கப்படுவதால் முன்கூட்டியே செலுத்தும் வரி அளவு குறைகிறது.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களைத் தாக்குமுகமாக வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்ட ஆபரேட்டர்களுக்கான கொடுக்கும் தொகைகளுக்கு 5 விழுக்காடு டி.சி.எஸ். ஆக டி.ஆர்.சி. விதிக்க 206சி வகைசெய்கிறது. ஆபரேட்டர்களோ டி.சி.எஸ்.க்கான 5 விழுக்காடு அதிகக் கட்டணத்தை வசூலித்து அரசின் கணக்கிற்கு அனுப்பிவிடுவார். கல்வி அல்லது மருத்துவத் தேவைகளுக்காக வாங்கிய வங்கிக் கடன்களிலிருந்து பணம் அனுப்பப்பட்டால், அந்தச் சட்டப்பிரிவின்கீழ் நிதிக்கு எந்தவிதமான தளர்வுகளும் இல்லை என்று குறிப்பிடுவதும் முக்கியம்.
பிரிவு 194 இன் கீழ் டிவிடெண்டில் டி. டி.எஸ்.
நாம் முன்னர் விவாதித்தபடி, இப்போது பெறப்பட்ட ஈவுத்தொகை ஒரு வருடத்தில் வேறு எந்த வருமானத்திற்கும் பொலவே வரி விதிப்பிற்கு உள்ளாகிறது. இருப்பினும், ஈவுத்தொகை ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அத்தகைய ஈவுத்தொகை 10 விழுக்காட்டிற்கு டி.டி.எஸ்.க்கு உள்பட்டது. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களில் முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட ரூ.5,000-க்கு மேற்பட்ட ஈவுத் தொகைக்கும் இதே போன்ற நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
பிளாட், வீடு, வணிக இடத்தை வாங்குதல்
வழக்கமாக வணிக வருமானம் இல்லாத நபர்கள் பின்வருவனவற்றைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து பரிவர்த்தனைகளிலும் டி.டி.எஸ். உடன் இணங்க வேண்டியதில்லை. அவை:
1. நீங்கள் ஒரு குடியிருப்பை மாற்றுபவரிடமிருந்து தொகுப்பு வீடு அல்லது வில்லா அல்லது வணிக இடத்தை வாங்கும்போது, நீங்கள் டி.டி.எஸ்.ஸை நோக்கிப் பரிவர்த்தனை தொகையில் ஒரு விழுக்காடு வைத்திருக்க வேண்டும். மேலும் பதிவுசெய்யும் நேரத்தில் கழித்த தேதியிலிருந்து முப்பது நாள்களுக்குள் பிரிவு 26கியூ.பீ.இல் இந்த நோக்கத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சிறப்பு செலுத்தும் தாளில் சொத்து வாங்குபவர் விற்பவர் இருவரும் நிலையான கணக்கு எண்களைக் குறிப்பிட்டு (PAN) அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். இந்தப் பரிமாற்றத்திலிருந்து பிடிக்கப்பட்ட வரித்தொகையை வரி விவரங்கள் தாக்கல்செய்யப்படும்போது விற்பவர் கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் பிளாட் அல்லது வில்லா அல்லது வணிக இடத்தை வாங்கும்போது இது பொருந்தும். இந்த ஒரு விழுக்காடு வரிப்பிடிப்பு (டி.டி.எஸ்.) அவ்வப்போது தவணைகளில் வரி கட்டும்போதே அவர் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும், சொத்துக்கான மொத்த ஒப்புதல் மதிப்பு ரூ .50 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் இந்த வரிப்பிடிப்பு டி.டி.எஸ். இருக்காது.
2. வாங்குபவர் இந்தியாவில் வசிப்பவராகவும் மற்றும் விற்பனையாளர் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியராகவும் (என்.ஆர்.ஐ.) இருக்கும்போது வரிப்பிடிப்பு டி.டி.எஸ். சிக்கலானதாக இருக்கும். வாங்குபவர் டி.டி.எஸ். அளவு குறித்து சான்றிதழ் பெறுவதற்காகச் சர்வதேச பிரிவில் ஐ.டி.ஓ.வுக்கு விண்ணப்பம் செய்யுமாறு (என்.ஆர்.ஐ.) அயல்நாட்டு இந்தியரைக் கோருவார்.
மேலும் அவரிடம் வாங்கும்போது ரூ.50 லட்சம் வரை தரப்படும் வரிவிலக்கும் பொருந்தாது. மேற்கூறியவற்றைக் கடைப்பிடிப்பதில் தவறு ஏற்படின் அதனால் ஏற்படும் நிதிச் சுமையைத் தவிர தண்டனையே விளைவாக முடியும்.
இதையும் படிங்க... பெங்களூருவுக்கு அடிமைகளாகக் கடத்திவரப்பட்டவர்கள் மீட்பு