ETV Bharat / bharat

தாய்மார்களுக்காக மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் சிறப்பு சலுகை! - வாக்குப்பதிவு

மும்பை: வாக்குப்பதிவு நாளில் சிறு குழந்தைகளை எங்கே போடுவது குறித்த கேள்விக்கு மும்பை மாநில தேர்தல் ஆணையம் சிறப்பு யோசனை ஒன்றை வழங்கியுள்ளது. இது வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சிறு குழந்தைகள்
author img

By

Published : Apr 2, 2019, 7:18 PM IST

நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குசாவடிகள் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் குழந்தைகள் வைத்துக் கொண்டு வரிசையில் நீண்ட நேரம் நின்றுக் கொண்டு எப்படி வாக்களிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதை பரிசீலினை செய்த அம்மாநில தேர்தல் ஆணையம் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் வாக்களிக்க வசதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும், குழந்தைகளை பார்த்துக் கொள்ள சிறப்பு பிரிவு அமைக்கப்படும் என்றும், இந்த பிரிவில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு ஊழியர் மற்றும் உதவியாளர் என இருவர் இருப்பர். இவர்கள் தாய்மார்கள் வாக்களித்து விட்டு வரும் வரை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார்கள். அதோடுமட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாட பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களும் இந்த சிறப்பு பிரிவில் இருக்கும். இவ்வாறு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.