டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான காற்று மாசு காரணமாக அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு நடத்திய நகராட்சி வளர்ச்சிக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி மாசைக் கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் டெல்லியைச் சேர்ந்த மூன்று நகராட்சி கமிஷனர்கள், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர், ஜல் நிர்வாகத்தின் தலைவர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த நகராட்சி வளர்ச்சிக் கூட்டம் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் இந்த கூட்டத்தை தலைமைதாங்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகதாம்பிக்கா பால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இது குறித்து புகார் தெரிவித்து கூட்டத்திற்கு வராத அலுவலர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார்.
இதைத் தொடர்ந்து அந்த அலுவலர்கள் உரிய விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் அவர்களின் இந்த செயலை ஓம் பிர்லா கண்டித்துள்ளார்.
இதையும் படியுங்க: