சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகப்படியான உயிரிழப்புகள் நடந்தது.
தற்போது அதனை ஸ்பெயின் விஞ்சி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்பெயினில் 655 பேர் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளனர். ஆக ஸ்பெயினில் இறப்பு விகிதம் நான்காயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த காலத்தை காட்டிலும் 19 விழுக்காடு அதிகரிப்பாகும். ஸ்பெயினில் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றாததே, கரோனா தொற்று வீரியமாக பரவ காரணமாகிற்று. உலளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.