உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டி, சமாஜ்வாதி கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணல் காந்தி பிறந்த தினத்தை ஒட்டி அமைதி முறையில் இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெறுவதாகக் கூறப்பட்டது.
அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் குற்றங்கள், வேலையின்மை, புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் பேரணியில் அக்கட்சியைச் சேர்ந்த 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேரணி லக்னோ ஜி.ஓ.பி. பூங்கா அருகே உள்ள காந்தி சிலையை நெருங்கும் போது சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களை களைந்து செல்ல காவல்துறை எச்சரித்தனர்.
கட்சியினர் செவி சாய்க்காததை அடுத்து அவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை பல்வேறு நபர்களை கைது செய்து கொண்டு சென்றனர். ஆளும்கட்சி ஜனநாயக உரிமையை பறிக்கும் விதமாக அடுக்குமுறையை ஏவிவிடுவதாக சமாஜ்வாதி சட்டமன்ற கட்சி தலைவர் ராம் கோவிந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பிகார் தேர்தல்: அக்.4இல் பாஜக மத்திய குழுக் கூட்டம்