மத்திய அரசு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேதிகளை அறிவித்துள்ளது. இருந்தபோதும் இதற்குப் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, காங்கிரஸ் ஆட்சிபுரியும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும், பாஜக ஆட்சிப் புரியாத முதலமைச்சர்களுடனும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று (ஆக. 26) அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இக்கூட்டத்திற்கு மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கரோனாவிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை!