இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்துவருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூலை11) காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக சந்தித்து கலந்து ஆலோசித்தார்.
அப்போது, நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கரோனா பரவல், பொருளாதார நிலை, இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து விவாதித்தனர்.
மேலும், கரோனா வைரஸ் பரவல், ஊரடங்கை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் எம்பிக்கள் கே. சுரேஷ், சசி தரூர், மாணிக்கம் தாகூர், ஜோதி மணி, அண்டோ அந்தோணி, கவுரவ் கோகோய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க...தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமைச் செயலகம்!