டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் (Congress Parliamentary Party) உரையாற்றிய அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது,
காஷ்மீர் சட்டம் 370 நீக்கம்
"ஜம்மு - காஷ்மீர், லடாக்கிற்கு வழங்கப்பட்டு வந்த சட்டம் 370ஆவது பிரிவை பொய்யான முறையில், ஜனநாயகத்தைக் கொன்று மத்திய அரசு நீக்கியது. அம்மாநிலத்திற்கு 'புதிய ஆரம்பத்தை' கொடுப்பதாகக் கூறி அவர்கள் அச்சட்டத்தை நீக்கினார்கள். ஆனால் நிஜத்தில் தலைகீழாக நடந்துள்ளது.
அஸ்ஸாமில் என்.ஆர்.சி எனப்படும் குடியுரிமை பதிவேட்டு விவகாரத்தில், பாஜக எடுத்த நிலைப்பாடு என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் இடையேயும் பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடியவை. இப்படி நாட்டிற்கு விரோதமாக அனைத்தையும் செய்துவிட்டு பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டம் 70ஆம் ஆண்டைக் கொண்டாடுவது அக்கட்சியின் போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
மகாராஷ்டிர அரசியல்
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக தங்களின் அதீத நம்பிக்கை மற்றும் ஆணவத்தால் அக்கூட்டணியை இழந்தது.
பாஜக அரசு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்தார்கள். அது தொடர்பாக காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உச்ச நீதி மன்றத்திற்குச் சென்றவுடன் பாஜக தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கினார்கள்" என்று பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிக்க: நாடாளுமன்றத்தில் கர்ஜித்த தமிழ்நாடு எம்.பி.க்கள்!