இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவில் அடிப்படை உரிமைகளை பெறவும், அரசு, அரசு சாராத அமைப்புகள் மீதான தங்களது சந்தேகங்களை கலைய தகவல் அறியும் உரிமை சட்டத்தை 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மக்கள் பயன்பெறும் இந்த சட்டத்தை தங்களது ஆட்சிக்கு மத்திய அரசு இடையூறாக கருதுகிறது.
இதனால் மத்திய அரசு தகவல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை முற்றிலும் சீர்குலைக்க நினைக்கிறது. தேர்தல் ஆணையம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இணையாக அமைக்கப்பட்ட தகவல் ஆணையத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சியே மத்திய அரசின் ஆர்டிஐ மீதான சட்டத்திருத்த மசோதா. மக்களவையில் உள்ள பெரும்பான்மை மூலம் தங்களது எண்ணங்களை நிறைவேற்ற நினைக்கிறது மத்திய அரசு” என கூறப்பட்டுள்ளது.