ETV Bharat / bharat

தொற்றுநோயான கோவிட்-19 சமூகத்தின் நோயாக மாறுகிறதா ?

author img

By

Published : Jun 24, 2020, 10:49 PM IST

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கோவிட்-19, நமது சமூகத்தில் முன்னோடி இல்லாத பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயிரையும் துச்சமென கருதி கரோனா எதிர்ப்பு போரில் நிற்கும் முன்னணி வீரர்களான மருத்துவர்கள் அவமரியாதைக்குள்ளாவது, மன அழுத்தத்தில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது, குணமடைந்த கோவிட்-19 நோயாளிகள் பொது சமூகத்தால் ஒதுக்கப்படுவது என எண்ணற்ற சமூக பிரச்னைகள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக மருத்துவர் ஆதித்யா திவாரியிடம் நமது ஈடிவி பாரத் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொற்றுநோயான கோவிட்-19 சமூகத்தின் நோயாக மாறுகிறதா ?
தொற்றுநோயான கோவிட்-19 சமூகத்தின் நோயாக மாறுகிறதா ?

கேள்வி : நாம் யாரையாவது தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்படும்போது ஒரு உரையாடல் நமக்கு கேட்கும் அதில் நாம் கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நாம் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். உண்மையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களுக்கு மருத்துவ சேவை செய்தவர்களை பொது சமூகம் பாராபட்சமாக நடத்துவது குறித்து நாம் வெளிப்படையாகவே பேசுவோமா ?

பதில் : நமக்கு கிடைத்துள்ள ஒரு தகவலின் படி குடியிருப்புப் பகுதிகளில் இருப்பவர்கள், மற்ற வீடுகளில் யாராவது இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை ஒருவகையான தீண்டாமையோடு அணுகுகின்றனர். அவர்களை சொந்த குடியிருப்பிற்குள்ளேயே அனுமதிக்க தயங்குகின்றனர். எடுத்துக்காட்டிற்கு, ஒரு பெண் மருத்துவர் அவருடைய வீட்டிற்குள் நுழைய அக்கம் பக்கத்தினர் அனுமதி மறுத்தனர். ஏனென்றால், அவர் பணிபுரியும் இடத்தின் மூலமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தாங்கள் அச்சப்படுவதாக கூறியுள்ளனர்.

மேலும், கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஒரு ஆண் மருத்துவருக்கு கோவிட்-19 தொற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்படுகிறார். அவரது குடியிருப்பு பகுதியும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கோபம் கொண்டதாக அறிய முடிகிறது. தன்னால் மற்றவர்களும் பாதிப்பிற்குள்ளானதாக எண்ணி அந்த மருத்துவர் மிகுந்த துன்பத்திற்குள்ளாகி உள்ளார். அதை எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையும் தாண்டி ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய சிலர், அந்த முடிவுகள் வருவதற்கு முன்பே தலைமறைவாகினர். சிலர் ஒருவேளை தங்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக முடிவுவந்துவிட்டால் என்ன செய்வதென்ற அச்சத்தில் உச்சக்கட்டமாக 'தற்கொலை' முடிவை எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் நோயை கண்டு அச்சப்படுவதைவிட தங்களை சுற்றியுள்ள மனிதர்களை கண்டு அச்சப்படுகின்றனர் என்பதே ஒரு கசப்பான உண்மையாகும்.

கேள்வி : உங்களைப் பொறுத்தவரையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இவ்வாறு பிறர் நடந்து கொள்வதற்கான காரணம் தான் என்ன ?

பதில் : எப்போதெல்லாம் இது போன்ற ஒரு நோய் பரவும் நிலை உருவாகிறதோ... அப்போதெல்லாம் மனிதர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். இதில், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இல்லை. இவை அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகின்றன என்றே சொல்லலாம். இந்த சமூகத்தில் நிலவும் அறியாமையும், அவர்களுடைய அறியாமையும் அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த பயமானது மக்களுக்கு இடையே பாகுபாடு கொண்டு வருகின்றது.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நமது சமுதாயத்தில் நிறைய நடைபெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் தொழுநோய் பாதிப்பு பூதாகரமாக ஆக்கப்பட்ட போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் ஒதுக்கி வைத்தது. மேலும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு அச்சம் கொண்டு அவர்களை அதற்கான மருத்துவமனையில் சேர்ப்பது. காசநோயாளிகளும் இதே கொடுமைகளை அனுபவித்தனர்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சமூகப் புறக்கணிப்பு செய்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செயல்கள் மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. இப்போது கோவிட்-19 பரவி வரும் சூழலிலும் அதையே தான் மக்கள் திரும்பவும் செய்கின்றனர். இவ்வளவு அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சி கண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் மக்கள் இவ்வாறு இருப்பது அவர்களின் அறியாமையை குறிக்கின்றது.

கேள்வி : நம்மை சுற்றி கோவிட்- 19 குறித்த நிறைய கட்டுக்கதைகளும் உலாவிகொண்டிருகின்றனவே...

பதில் : சூடான வெப்பநிலையில் வைரஸ் உயிருடன் வாழாது என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்பன போன்ற கட்டுக்கதைகள் ஒரு பக்கம். சுத்திகரிப்பு மருந்துகளான எத்தனால், சானிட்டைசர் போன்றவற்றை குடிப்பதால் வைரஸ் இறந்துவிடும் என்பன போன்ற கட்டுக்கதைகள் மற்றொரு பக்கம். மேலும், மக்களுள் சிலர் கடவுள் மீது தாங்கள் கொண்ட அதீத நம்பிக்கையினால் கடவுள் தங்களைக் காப்பார் என கூறி தாங்களே சுத்திகரித்துக் கொள்வதில்லை, சமூக சந்திப்புகளை எப்போதும் போலவே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் அவர்கள் மதம் சார்ந்த கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் எந்த ஒரு கட்டுப்பாடுகளுமின்றி செய்து வருகின்றனர்.

கேள்வி : இதனை சரி செய்யவும், மக்களிடம் நிலவிவரும் பீதியைப் போக்கவும் அரசு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் ?

பதில் : பீதியைப் போக்க சரியான விவரங்கள் கொண்டுச் சேர்க்க வேண்டும். அத்துடன், மேலும் சிலவற்றையும் செய்ய வேண்டியது அவசியம். அதாவது, எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும் போலியோ சொட்டு மருந்து காண விழிப்புணர்வு தகவல்களையும் மக்களிடம் கொண்டுச் சென்றது போல இப்போதும் செய்ய வேண்டும். சமூகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள், சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு அரசாங்கம் சரியான விழிப்புணர்வுக்கான தகவல்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும். இதேபோல், சரியான தகவல்களை வெளியிடுவதில் அரசு நிறுவனங்களோடு சமூகத்தின் பிரமுகர்களும் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.