கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற எவ்வித தேவைகளுக்காகவும் மக்கள் வெளியில் நாடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 606 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 128 பேரும், இரண்டாவதாக கேரளா மாநிலத்தில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முழுவீச்சில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இதன் ஒருபகுதியாக கேரளாவில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியில் குழாய் (pipe) மூலம் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
கரோனா தொற்றைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நூதன முறையைப் பின்பற்றுகின்றனர்.
-
How to maintain physical distance between shopkeeper & customer while buying essential supplies -- the Kerala way! #COVID19India pic.twitter.com/H1djrcFDSO
— Shashi Tharoor (@ShashiTharoor) March 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How to maintain physical distance between shopkeeper & customer while buying essential supplies -- the Kerala way! #COVID19India pic.twitter.com/H1djrcFDSO
— Shashi Tharoor (@ShashiTharoor) March 25, 2020How to maintain physical distance between shopkeeper & customer while buying essential supplies -- the Kerala way! #COVID19India pic.twitter.com/H1djrcFDSO
— Shashi Tharoor (@ShashiTharoor) March 25, 2020
இதனிடையே கேரளா மாநிலம் நியாயவிலைக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பலரும் பாராட்டி இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் மருத்துவருக்கும் பரவிய கரோனா