ETV Bharat / bharat

கலாம் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம் - கலாம் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்

புதுச்சேரி: இந்தியா 2020 திட்டத்திற்காக பிரதமர் மோடியை சந்திக்க தூத்துக்குடியிலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய சமூக ஆர்வலர் இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.

social activist cycling trip delhi from thoothukudi
social activist cycling trip delhi from thoothukudi
author img

By

Published : Jan 17, 2020, 10:33 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பரணிதரன். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தபோது, விஷன் 2020க்கு பாடுபட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்காக 15 ஆண்டு காலமாக இந்திய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து பல திட்டங்களை தயாரித்து அதை பிரதமர் மோடியிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அப்துல் கலாம் நினைவு தினத்தன்று கோவில்பட்டியில் இருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

சமூக ஆர்வலர் ராஜா பரணிதரன் பேட்டி

இந்நிலையில் இன்று புதுச்சேரி வந்த அவர், முதலமைச்சர் நாராயணசாமியை சந்திக்க உள்ளார். இதையடுத்து தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு தனது பயணத்தை மீண்டும் தொடர உள்ளார்.

இதற்கிடையே ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டியளித்த இவர், இயற்கை சித்தா உணவு முறை குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இந்தியாவின் தலைநகர் டெல்லி என்பதை மாற்றி நாக்பூரை தலைநகராக அறிவிக்க வேண்டும். புதிய தலைநகருக்கு ஜெய்ஹிந்த் சிட்டி என்று பெயர் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 100 கோரிக்கைகளை வலியுறுத்தி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும், இதுவரை 1050 சமூக ஆர்வலர்களை சந்தித்துள்ளதாகவும், மார்ச் 25ஆம் தேதி டெல்லியில் தனது பயணத்தை முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி பொதுமக்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது?

Intro:இயற்கை சித்தா உணவு முறைகளை குழந்தைகள் பாடத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 100 கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் கோவில்பட்டியில் இருந்து டெல்லி நோக்கி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்

Body:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா பரணிதரன் இவர் இந்தியா வல்லரசாக வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தன்று கோவில்பட்டியில் இருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்துள்ளார் அப்போது விஷன் 2020 க்கு பாடுபட வேண்டும் என்ற கலாமின் வேண்டுகோளுக்கு இணங்க 15 ஆண்டு காலமாக ஆய்வு செய்து இத் திட்டங்களை பிரதமர் மோடியிடம் முறையாக ஒப்படைப்பதற்காக தனது பயணத்தை தொடங்கினார்

இந்த நிலையில் இன்று புதுச்சேரி வந்த அவர் முதல்வர் நாராயணசாமி சந்திக்க உள்ளார் இங்கு தமிழ்ச்சங்க சார்பில் நடைபெற உள்ள ஒரு விழாவில் பங்கேற்க உள்ளார் பின்னர் தனது சைக்கிள் பயணத்தை தொடர உள்ளார். இயற்கை சித்தா உணவு முறை குழந்தை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.. அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும் இந்தியாவின் தலைநகர் டெல்லி என்பதை மாற்றி நாக்பூரை தலைநகராக அறிவிக்க வேண்டும் புதிய தலைநகருக்கு ஜெய்ஹிந்த் சிட்டி என்று பெயர் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 100 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார் இதுவரை ஆயிரத்து 50 சமூக ஆர்வலர்களை சந்தித்துள்ளார் மார்ச் 25-ஆம் தேதி டெல்லியில் தனது பயணத்தை முடித்து வைக்க அவர் திட்டமிட்டுள்ளார் அங்கு தமிழ் சங்கத்தினரை சந்தித்து இது தொடர்பாக தனது கோரிக்கையை அடங்கிய புத்தகத்தை வெளியிடுகிறார் புதுச்சேரி வந்த அவருக்கு இன்று புதுச்சேரி பொதுமக்கள் வாழ்த்துக் கூறினர்

Conclusion:இயற்கை சித்தா உணவு முறைகளை குழந்தைகள் பாடத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 100 கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் கோவில்பட்டியில் இருந்து டெல்லி நோக்கி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.