ETV Bharat / bharat

'மனங்களை இணைப்போம், எதிர்காலத்தை உருவாக்குவோம்' - தொடங்கியது துபாய் கண்காட்சி - UAE

டெல்லி: உலகப் புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் இந்தியாவுக்கு நிரந்த அரங்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி 'மனங்களை இணைப்போம், எதிர்காலத்தை உருவாக்குவோம்' என்ற கருப்பொருளில் நடக்கிறது.

Dubai Expo 2020
author img

By

Published : Oct 21, 2019, 7:08 PM IST

ஐக்கிய அரசு அமீரக நாடான துபாயில் நடைபெறும் கண்காட்சி உலகச் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கண்காட்சியில் உலகின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் வந்து குவிவார்கள்.
உலக நாடுகளைச் சேர்ந்த சிறந்த பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் தகவல் தொழில்நுட்பம், கருத்துகள் பகிர்வுக்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது.

இந்தக் கண்காட்சியில் மொத்தம் 190 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்த மாதம் தொடங்கிய கண்காட்சியானது அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம்வரை நடைபெறும். அதற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் அரங்குகள் அமைத்து கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தியாவுக்கு நிரந்த அரங்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நட்பு நாடாக இந்தியா தொடர்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் இந்தியர்கள், அமீரகத்தில் வசிக்கின்றனர். 24 மில்லியன் டாலர் பணம் இந்தியாவுக்கு கிடைக்கிறது.

இருதரப்பு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும்விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமீரகம் தங்கள் நாட்டின் மிக உயரிய விருதான ஷேக் சாயித் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் துபாய் கண்காட்சி ஒவ்வொரு கருப்பொருளில் நடக்கும். இந்தாண்டு துபாய் கண்காட்சி, “மனங்களை இணைப்போம், எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் நடக்கிறது.

Dubai Expo 2020
துபாய் கண்காட்சி (எக்ஸ்போ) 2020ல் கலந்துகொண்ட இளவரசர் ஷேக் ஹம்தான்.
துபாய் உலகக் கண்காட்சி உணவுப் பொருளுக்கும் பிரசித்தம் பெற்றது. உலக நாடுகளின், விதவிதமான நாவில் எச்சில் ஊறும் உணவுப் பொருள்களை ருசிக்க வேண்டுமென்றாலும் இங்கு செல்லலாம் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிக்க: பாகிஸ்தானியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய துபாய் இந்தியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.