கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உன்னிகுளம் பகுதியில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெற்றோர் இல்லாத சமயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உள்பட மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.