பெங்களூருவில் பனரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள 6 மாத புலிக்குட்டிக்கு இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸின் பெயர் சூட்டப்பட்டது.
ஒரே மாதத்தில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் பெருமைப்படுத்தும் வகையில் பனரகட்டா உயிரியல் பூங்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஹிமா என்ற பெயர் சூட்டப்பட்ட புலிக்குட்டி உட்பட எட்டு புலிக்குட்டிகள் இன்று மக்கள் பார்வைக்காக பூங்காவில் விடப்பட்டது.