ETV Bharat / bharat

அரசு மருத்துவமனையில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு!

author img

By

Published : Nov 30, 2020, 5:09 PM IST

ஷாடோல்: மத்தியப் பிரதேசத்தின் ஷாடோலில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Six infants die in 48 hours in Madhya Pradesh, probe ordered

மத்தியப் பிரதேசத்தின் ஷாடோலில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் புதிததாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள், மருத்துவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குழந்தையைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். இருப்பினும், மருத்துவமனை தனது அறிக்கையில், குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஷாடோலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் (சி.எம்.ஹெச்.ஓ.) ராஜேஷ் பாண்டே கூறுகையில், "குழந்தைகளின் இறப்பு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மூத்த சுகாதார அலுவலர்களுடன் அவசர சந்திப்பு நடத்தினார்.

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தாண்டு ஜனவரியில், ஷாடோலில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போதைய சுகாதார அமைச்சர் துளசி சிலவத்தின் அறிவுறுத்தலின்பேரில் தலைமை மருத்துவ சுகாதார அலுவலர், அறுவை சிகிச்சை வல்லுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.