ETV Bharat / bharat

கொரோனா அபாயம்: நாட்டின் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்! - மேற்கு வங்கத்தில் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனோ தொற்று குறித்த சோதனை

மேற்கு வங்கத்தில் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கோவிட்-19 தொற்று குறித்த சோதனை நடத்தப்பட்டு அதில், கொரோனா அறிகுறி இருப்பதாக கருதப்படும் ஆறு பேரை பெலியகட்டா மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அம்மாநில அரசு சுகாதாரத் துறை கண்காணித்துவருகிறது.

Coronavirus  Coronavirus in Bengal  Coronavirus in India  COVID-19  Six hospitalised for corona in Bengal  2.56 lakh screened for corona in Bengal  மேற்கு வங்கத்தில் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனோ தொற்று குறித்த சோதனை  மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று குறித்த சோதனை
மேற்கு வங்கத்தில் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனோ தொற்று குறித்த சோதனை
author img

By

Published : Mar 15, 2020, 6:19 AM IST

Updated : Mar 15, 2020, 10:18 AM IST

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாகக் கருதப்படும் ஆறு பேரை பெலியகட்டா மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அம்மாநில சுகாதாரத் துறை கண்காணித்துவருகிறது.

மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 1,997 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மேற்குவங்கத்தில் யாரும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேரில் மூன்று இந்தியர்கள், பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த தம்பதி உள்ளனர்.

கொல்கத்தா, பக்டோக்ரா விமான நிலையத்திற்கு வந்த 67ஆயிரத்து 761 பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. நேபாளம், வங்க தேசம் நாட்டிலிருந்து தரைவழி மார்க்கமாக மேற்கு வங்கத்துக்குள் நுழையும் ஏழு இடங்களில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 153 பேருக்கு கோவிட்-19 தொற்று குறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மேற்கு வங்கம் வந்த இரண்டாயிரத்து 187 பயணிகள் கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டனர். அதில், 204 பேருக்கு கண்காணிப்பு காலம் முடிவடைந்து தற்போது 1,977 பேர் கண்காணிப்புக்குள் உள்ளனர். மீதமுள்ள ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாகக் கருதப்பட்ட 50 நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனே, கொல்கத்தாவிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்மாநில அரசு அனுப்பியிருந்தது. அதில், யாருக்கும் கோவிட்- 19 தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும் தங்களது வீட்டில் 28 நாள்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 பீதி: இந்திய-பூடான் எல்லை மூடல்!

Last Updated : Mar 15, 2020, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.