ETV Bharat / bharat

16 வயது சிறுமியைத் திருமணம் செய்த முதியவர்: 6 பேர் கைது - 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த முதியவர்

ஹைதராபாத்: 16 வயது சிறுமியை 57 வயது மதிக்கத்தக்க நபர் கட்டாய திருமணம் செய்த விவகாரத்தில், 6 பேரைக் கைது செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

arrest
arrest
author img

By

Published : Dec 31, 2020, 5:20 PM IST

தெலங்கானா மாநிலத்தில் 57 வயது நபருக்கு 16 வயது சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்த விவகாரத்தில் 6 பேர் இன்று (டிச.31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்குப் பதிவு

சிறுமியைத் திருமணம் செய்த 57 வயது நபர் தலைமறைவாகிய நிலையில், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணம் நடந்த பின்னர் அந்நபர் அருகிலிருந்த ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்த காவல் துறையினர், அவர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

திருமணத்தின் பின்னணி

குற்றஞ்சாட்டப்பட்ட 57 வயது நபரிடம், அந்தச் சிறுமியின் அத்தை ஏற்கனவே கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்திலும் அவரிடமிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பெற்று திரும்பச் செலுத்தாமல் இருந்துள்ளார்.

கடன் தொகையை நிரந்தரமாக திரும்பச் செலுத்தமால் இருப்பதற்காக சிறுமியைப் பகடைக்காயாக சிறுமியின் அத்தை பயன்படுத்தியுள்ளார். கடன் கொடுத்த 57 வயது நபருக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கும் திட்டமே இங்கிருந்துதான் தீட்டப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

இந்தச் சட்ட விரோத திருமணத்தைக் குறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் அத்தை, அவரது கணவர், இரண்டு ஏஜெண்ட்ஸ், திருமணத்தை நடத்தி வைத்த இஸ்லாமிய கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இஸ்லாமிய கண்காணிப்பாளரிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து அந்த நபர் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தலைமறைவான பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தும் கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.