ETV Bharat / bharat

கரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் 6 நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினரிம் ஒப்படைப்பு! - தெலங்கானாவில் தள்ளிச்சென்ற இறுதிச்சடங்கு

ஹைதராபாத்: கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதில் அரசு அலுவலர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆறு நாள்களுக்குப் பிறகு அந்நபருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 21, 2020, 7:36 PM IST

தெலங்கானா மாநிலம் மல்லாபூரில் அன்னபூர்ணா காலனியைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர், ஜூன் 16ஆம் தேதி உஸ்மானியா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், இரண்டு நாள்களுக்குப் பிறகு அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், தொற்று உறுதிசெய்யப்பட்ட அடுத்த 15 நிமிடங்களிலே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், குடும்பத்தினரிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக நச்சாரம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு காவலர்களை அழைத்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் மருத்துவமனைக்குச் செல்லாமல் தாமதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுமார் ஆறு நாள்களுக்குப் பிறகு (ஜூலை 21) சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவரின் தாயாருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.