கேரள மாநிலம் எர்ணாகுளம் கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளார் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது என அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளார் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மேலும், சபரிமாலையில் பெண்கள் நுழைவு தொடர்பாக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து கூடுதல் விளக்கங்கள் வரும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். சபரிமலை தீர்ப்பின் அம்சங்கள் குறித்து பல காரியங்களை இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தீர்ப்பை அமல்படுத்தாததற்கு இதுவும் ஒரு காரணமென்றும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: சபரிமலைக்கு செல்லவிருந்த பெண் மீது மிளகாய் ஸ்பிரே தாக்குதல் - ஒருவர் கைது
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைவதை ஆதரிக்கும் பாஜக ஏன் சபரிமலை தீர்ப்பை எதிர்க்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தி, தங்களின் அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக அரசின் குடியுரிமை மசோதா குறித்து பேசிய அவர் ‘‘குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதன் மூலம், வகுப்புவாதத்தை கூர்மைப்படுத்த விரும்புகின்றனர். இந்திய மக்களை பிரித்து, நமது மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்தை மாற்றி, இந்து நாடாக்க முயற்சிக்கின்றனர். இது அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்’’ என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: தோல்வியில் முடிந்த சபரிமலை பயணம்: மும்பை திரும்பிய 'திருப்தி தேசாய்'