மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக சார்பாக நடந்த தேர்தல் பரப்புரையில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அதில், வன்முறை வெடித்து பாஜகவினரும், திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டனர். இந்த பயங்கர கலவரத்தில் மேற்கு வங்க மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தபட்டது.
இதற்கு பல்வேறு அரசு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாஜக சார்பில் வித்யாசாகரின் சிலை கட்டித்தரப்படும் என பிரதமர் மோடியும், அக்கட்சி தேசிய தலைவர் அமித் ஷாவும் உறுதியளித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த சிறுப்பு புலனாய்வு குழு ஒன்றை கொல்கத்தா காவல் துறையினர் நியமித்துள்ளனர்.