ETV Bharat / bharat

அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்? - காங்கிரஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் கருத்து வேறுபாடு நிலவிவருவதால், அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பாஜகவுடன் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்
author img

By

Published : Jul 12, 2020, 8:11 PM IST

Updated : Jul 12, 2020, 8:30 PM IST

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போதிலிருந்தே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைடல் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இது முற்றியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவி அசோக் கெலாட்டுக்கும் துணை முதலமைச்சர் பதவி சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது.

இருப்பினும், பல விவகாரங்களில் இவர்களுக்கிடையே மோதல் நிலவிவந்தது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்துவந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலக பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அடுத்த விக்கெட் சச்சின் என கூறப்பட்டுவந்தது. இதனிடையே, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெற்றுவருவதாகக் கூறி சச்சின் பைலட் உள்பட் பலருக்கு மாநில உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பிய நோட்டீஸ் கெலாட், சச்சின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், சச்சின் பைலட் பாஜகவில் சேர்வது குறித்து அக்கட்சி தலைவர்களிடையே பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், சுயேச்சை என 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு சச்சினுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

  • Sad to see my erstwhile colleague, @SachinPilot too, being sidelined and persecuted by Rajasthan CM, @ashokgehlot51 . Shows that talent and capability find little credence in the @INCIndia .

    — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சச்சின் தற்போது காங்கிரஸ் கட்சியால் ஓரங்கட்டுப்பட்டு, முதலமைச்சர் அசோக் கெலாட்டால் துன்புறுத்தப்படுவதை கண்டு வருத்தப்படுகிறேன். திறமைவாய்ந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மோடியின் ஆட்சியில்தான் சீனா ஆக்கிரமிப்பு செய்தது - ராகுல் காந்தி

Last Updated : Jul 12, 2020, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.