ETV Bharat / bharat

ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து சோதனை : இந்தியாவில் என்ன நிலைமை?

டெல்லி : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழககத்தின் கரோனா தடுப்பு மருந்து சோதனையை மீண்டும் தொடங்க அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

SII to resume Oxford COVID-19 vaccine trials

author img

By

Published : Sep 13, 2020, 1:47 PM IST

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருத்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு திடீரென்று நரம்பியல் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பிரிட்டன் மட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வந்த மருத்துவப் பரிசோதனைகளும் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலில் நேற்று (செப்.12) இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், மருத்துவப் பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி பிரிட்டனில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இந்தக் கரோனா தடுப்பு மருந்து சோதனை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து சோதனையை மீண்டும் தொடங்க அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருப்பதாக இந்தியாவில் இந்தத் தடுப்பு மருந்தின் சோதனைகளை மேற்கொண்டுவரும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் முன்பே குறிப்பிட்டது போல, மருத்துவ சோதனைகள் முழுமையாக முடிவடையும் முன் முடிவுகளை நாம் எடுக்கக்கூடாது. இறுதிவரை இந்த செயல்முறையை நாம் மதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தடுப்பு மருந்து பரிசோதனையின்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவப் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது வழக்கமான நிகழ்வுதான் என்றபோதிலும், கரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.

கோவிட்-19 தொற்று காரணமாக உலகெங்கும் இதுவரை இரண்டு கோடியே 89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இனி விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.