ETV Bharat / bharat

ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள் மாபெரும் அளவில் அதிகரித்துள்ளன! - ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள்

மும்பை: கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள், அதாவது இணைய வழி குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு காலத்தில்  சைபர் குற்றங்கள்
ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்கள்
author img

By

Published : Jun 18, 2020, 4:32 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், உலகம் முழுவதும், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தொழில், போக்குவரத்து என அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், வர்த்தகப் பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் ஆகியவை, ஆன்லைனில் மட்டுமே நடந்து வருகின்றன. அதனால், ஆன்லைன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதை சைபர் கிரைம் கிரிமினல்கள் பயன்படுத்தி, நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களை அதிக அளவில் நிகழ்த்துவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக, உலகில் சைபர் கிரைம் தாக்குதல் சம்பவங்கள் மாபெரும் வகையில் அதிகரித்துள்ளன. வளர்ந்து வரும் டிஜிட்டல் சார்பு இணைய நிறுவனங்களுக்கு, இந்தத் தாக்குதல் பாதிப்பை அதிகரித்துள்ளதாகவும் ஒவ்வொரு 39 விநாடிகளிலும் இதுபோன்ற ஒரு சைபர் தாக்குதல் (cyber attack) சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக, இந்தியாவின் பல குடிமக்கள் +92 என்று தொடங்கும் மொபைல் எண்களிலிருந்து வரும் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள் அல்லது குறுஞ்செய்திகள் வருவதாகவும்; அதில் விளையாட்டில் உங்களுக்கு சில பரிசுத் தொகை கிடைத்துள்ளது எனத் தெரிவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் உங்கள் தொகை, உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும்; இதற்கு உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவை எனப்பேசி சிலர் ஏமாற்றுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் வந்துள்ளன.

ஈடிவி பாரத் உடன் பேசிய சைபர் நிபுணர் அங்கூர் புராணிக், "நாங்கள் பொதுவாக நெட் பேங்கிங் போன்ற பல ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறோம். பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற கட்டண பணப்பையைப் பயன்படுத்துகிறோம். இது இணைய வழி மோசடிக்கு பயன்பெறுகிறது. இது போன்ற மோசடியில் இருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது போன்ற போன் கால் வரும் பொது, உடனே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பூரி ஜெகன்நாத் கோயில் ரத யாத்திரைக்குத் தடை - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.