உள்கட்சிப் பூசலுக்குப் பேர்போன காங்கிரஸ் கட்சியில் தற்போது அடுத்த பனிப்போர் வெடித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா, கமல்நாத் ஆகியோருக்கு இடையேயும் ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயும் தொடர்ந்து வார்த்தைப் போர் வெடித்துவருகிறது. இந்தப் பட்டியலில் பஞ்சாபும் தற்போது இணைந்துள்ளது.
பல காலமாக அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், மூத்தத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கு இடையே பிரச்னை இருந்துவந்தது. இதன் எதிரொலியாகக் கடந்தாண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி துறை மாற்றிய காரணத்தால் அமைச்சரவையிலிருந்து சித்து விலகினார்.
இருவருக்கும் இடையே தொடர் வார்த்தைப்போர் நீடித்துவந்த நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியையும் சித்து சந்தித்துப் பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில், கட்சி மேலிடம் அழைத்த காரணத்தால்தான் பிரியங்காவையும் சோனியாவையும் சந்தித்துப் பேசினேன். பஞ்சாபில் நிலவும் சூழல் குறித்தும் கட்சி மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு வரை மராத்தி கட்டாயம்: உத்தவ் அரசு அதிரடி