பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை ஒன்று ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலையை, அடையாளம் தெரியாத நபர்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி சேதப்படுத்தினர். சிலை உடைப்பு குறித்து ஷாபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பைடையில் ஷாபுரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஷாபுரா காவல் ஆய்வாளர் கூறுகையில், "ஆகஸ்ட் 11ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சியாமா பிரசாத் சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். இதேபோல், தமிழ்நாட்டில் பெரியார் சிலையும், திரிபுராவில் ரஷ்யா புரட்சியாளர் லெனின் சிலையும் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.