ஜம்மு: புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியினால் நாடு முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தற்போது தளர்வுடன் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்துவருகின்றன.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற வைஷ்ணவா தேவி கோயில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பக்தர்களின் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது.
அதிகப்பட்சமாக நாளொன்றுக்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கோயிலில் கூட்டம் கூடக் கூடாது என்றும், பக்தர்கள் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு பக்தர்களின் வசதிக்காக வைஷ்ணவா தேவி கோயில் மீண்டும் திறக்கப்படவுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் வழிபாட்டு தலங்கள் ஆக.16ஆம் தேதி முதல் திறப்பு!