ETV Bharat / bharat

அனைவரையும் வரவேற்கும் ஒரு நாடை காட்டுங்கள் - சிஏஏ குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் - அனைவரையும் வரவேற்கும் ஒரு நாடை காட்டுங்கள்

டெல்லி: அனைவரையும் வரவேற்கும் ஒரு நாடை காட்டுங்கள் என சிஏஏவுக்கு எதிரான விமர்சனத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

Jai
Jai
author img

By

Published : Mar 7, 2020, 5:34 PM IST

பிரபல தனியார் செய்தி நிறுவனம் சார்பாக டெல்லியில் வர்த்தக உச்ச மாநாடு நடத்தப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சட்டம் இயற்றியதன் மூலம் குடியுரிமையற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளோம். இதனை பாராட்டி இருக்க வேண்டும். எங்களுக்கு பிரச்னை வராதவாறு இதனை செய்துள்ளோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொறுத்தவரை பலர் பல கருத்துகளை கொண்டுள்ளனர். பலர் விமர்சனம் செய்கின்றனர். அனைத்து மக்களையும் வரவேற்கும் ஒரு நாட்டை காட்டுங்கள். யாராலும் அதற்கு பதில் கூற முடியாது" என்றார்.

காஷ்மீர் குறித்து பேசிய அவர், "காஷ்மீர் குறித்து தவறான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளோம். காஷ்மீர் விவகாரத்தை ஐநா முன்னதாக எப்படி கையாண்டது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். இந்திய நலனை கருத்தில்கொண்டு பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினோம்" என்றார்.

இதையும் படிங்க: மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை - மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.