இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாம் மாநிலம், லூதியானா காவல் துறை ஆணையர் ராகேஷ் அகர்வால், 'துப்பாக்கிச் சூடு நடந்தபோது அமித் அரோரா அலுவலகத்தில் இருந்துள்ளார். மொஹாலியில் இருந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அமித் அரோராவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைத் தேடி வருகிறோம்' எனத் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.