இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சென்னை,விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதியில் இருந்து வரும் மக்களால்தான் புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமாகிறது. இதனால் எல்லைகள் இன்னும் கூடுதலாக காவல் துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். மக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க, கரோனா முடியும்வரை புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் சண்டே மார்க்கெட் மற்றும் வார சந்தைகளுக்கு அனுமதி இல்லை.
அரசு கோவிட் மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துமனையில் தினமும் தலா 300 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ய வசதி இருந்தும் 100க்கும் குறைவாகவே பரிசோதனை நடக்கிறது. இதனை முழுமையாக செய்ய நேரில் சென்று உத்தரவிட்டுள்ளேன். புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் 9,000 பதவிகள் காலியாக உள்ளன. கரோனாவை காரணம் காட்டி தள்ளி போடாமல் முடிந்தவரையில் பதவிகளை நிரப்பிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடைகள் மூடும் நேரம் அண்டை மாநிலத்தை போல் குறைக்க அரசு பரிசீலித்துவருகிறது. விரைவில் நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்படும்” என்றார்.