ETV Bharat / bharat

'சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது' - ரன்தீப் சுர்ஜேவாலா

டெல்லி : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

"சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது " -  ரன்தீப் சுர்ஜேவாலா

author img

By

Published : Oct 1, 2020, 12:16 AM IST

1992ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடத்திவந்தது. இந்த மாத தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு நேற்று (செப். 30) அறிவிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், "குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்தத் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியா கோபால் தாஸ், உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோர் பாபர் மசூதியை இடிக்க முயன்ற சமூக விரோதிகளை தடுக்க முற்பட்டு உள்ளனரே தவிர, சதித்திட்டம் செய்யவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தரப்பு உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அவர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, "பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது நீதிக்கும், அரசியல் சாசனத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் முரணானதாக உள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பதாக அமைந்துள்ளது.

எந்த விலையை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நாட்டின் இனவாத நட்பையும் சகோதரத்துவத்தையும் அழிக்க பாஜக-ஆர்எஸ்எஸ், அதன் தலைவர்கள் செய்த அரசியல் சதித்திட்டத்தை முழு நாடு கண்டுள்ளது. இது பொய் அல்ல.

அரசியலமைப்பின் மீதும், வகுப்புவாத நட்பு மீதும், சகோதரத்துவ உணர்வின் மீதும் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இஸ்லாமிய மத வெறுப்புணர்வைத் தூண்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் யாரையும் குற்றவாளியாகக் கருதவில்லை. நாம் நீதிக்காக எங்கே போக வேண்டும்? நாங்கள் நீதிமன்றங்களை மதிக்கிறோம்.

ஆனால், அங்கு இத்தகைய தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டால் அதன் மீதான மக்களிடம் உள்ள மரியாதை குறைந்து கொண்டேதான் இருக்கும். நீதித் துறை தொடர்ந்து இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கினால், நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கிவிடும். இது மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும் மற்றொரு கறுப்பு நாள்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்திட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.